உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் இருந்து பிரேமலு நீக்கம் : ஹிந்தி ரீமேக் காரணமா?

ஓடிடியில் இருந்து பிரேமலு நீக்கம் : ஹிந்தி ரீமேக் காரணமா?

கடந்த 2024-ல் மலையாளத்தில் மமிதா பைஜு, நஸ்லேன் நடிப்பில் வெளியான பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கிரீஷ் ஏ.டி இயக்கியிருந்த இப்படம், மமிதாவிற்கு தமிழில் மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் உருவாக்கித் தந்தது. இந்த நிலையில், தற்போது ஓடிடி தளத்திலிருந்து 'பிரேமலு' படம் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதன் பின்னணியில் 'பிரேமலு' படத்தின் ஹிந்தி ரீமேக் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஹிந்தியில் 'பிரேம் கீட்டானு' என்கிற பெயரில் வீர் பஹாரியா, ஆபியா சையத் ஆகியோர் நடிப்பில் அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தற்போது இதன் ஒரு நிமிட டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த சமயத்தில்தான் 'பிரேமலு' படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், ஹிந்தி ரீமேக்கின் வசூலைக் காப்பாற்றத்தான் ஒரிஜினல் படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !