உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்சிக் : ஆன்லைன் முன்பதிவில் அதிர்ச்சி

டாக்சிக் : ஆன்லைன் முன்பதிவில் அதிர்ச்சி

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்சிக்' படம் நாளை (ஆக., 26) வெளியாக உள்ளது. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.

யஷ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'கேஜிஎப் 2' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால், முன்பதிவும் அமோகமாக இருந்தது. படமும் நன்றாக இருந்ததால் 1200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.

அந்தப் படத்துடன் ஒப்பிடும் போது 'டாக்சிக்' படத்திற்கான முன்பதிவு நிலவரத்தை ஆன்லைன் இணையதளங்களில் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களுரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நல்ல முன்பதிவு காணப்படுகிறது. அதேசமயம், தமிழகம், கேரளம், வட இந்திய மாநிலங்களில் மிக மிக சுமாரான முன்பதிவே நடந்துள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இன்னும் முன்பதிவு ஆரம்பமாகவில்லை.

படம் வெளிவந்த பின்பு விமர்சனங்கள் நன்றாக இருந்தால் படத்திற்கு வரவேற்பு அதிகமாகலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் படத்தை வாங்கியவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !