ஹாட்ரிக் வரவேற்பில் மமிதா பைஜு
தமிழ், மலையாளம் என இந்த ஆண்டில் இதுவரையில் மமிதா பைஜு நடித்து நான்கு படங்கள் வெளிவந்துவிட்டன. தமிழில் 'கர, ஜனநாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்களும், மலையாளத்தில் 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' படமும் வெளியாகி உள்ளன.
'கர' படம் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. 'ஜனநாயகன்' படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் 300 கோடி வசூலைக் கடந்ததாகச் சொல்கிறார்கள். அடுத்து வெளிவந்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் தமிழ், தெலுங்கில் வெற்றிகரமாக ஓடி 200 கோடி வசூலையும் கடந்துள்ளது.
கடந்த வாரம் வெளியான 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' திரைப்படம் 60 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து மூன்று முக்கிய படங்கள் நல்ல வசூலைப் பெற்றுள்ளதாக ஹாட்ரிக் வரவேற்பில் இருக்கிறார் மமிதா.
அடுத்து இந்த ஆண்டில் அவரது நடிப்பில் 'இரண்டு வானம்' படம் வெளியாக உள்ளது.