உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவிமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் படக்கதை என்ன?

ரவிமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் படக்கதை என்ன?


குடும்ப பிரச்னை, கோர்ட், வழக்கு என சில மாதங்களாக நிம்மதி இல்லாமல் இருந்த ரவிமோகன் இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். கணேஷ்பாபு இயக்கத்தில் அவர் நடித்த 'கராத்தேபாபு' இந்த மாதம் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையில் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து, தான் இயக்குனர் ஆகும் 'அன் ஆர்டினரி மேன்' படத்தை இயக்குவதிலும் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தில் கதைநாயகனாக நடிப்பது அவர் அல்ல, யோகிபாபு.

கடந்த 23 ஆண்டுகளில் 37 படங்களில் நடித்த ரவிமோகன் 'கோமாளி' படப்பிடிப்பில் இந்த கதையை யோகிபாபுவிடம் சொல்லியிருக்கிறார். அவர் இப்போது கால்ஷீட் கொடுக்க படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு சாதாரண மனிதன் எப்படி கடவுள் ஆகிறான் என்பது கதைக்கருவாம். ரவிமோகன் முதலில் படம் இயக்குவதால் பலரும் நான் கவரவ வேடத்தில் நடிக்க ரெடி என சொல்கிறார்களாம். ஆனால், அதை அவர் மறுத்துவிட்டாராம்.

ப்ரோ கிளப்

அதேபோல், ரவிமோகன் ஹீரோவாக நடிக்கும் 'ப்ரோ கோட்' படத்தில் தலைப்பு சில சட்ட பிரச்னைகளால் 'ப்ரோ கிளப்' என மாற்றப்பட்டுள்ளது. இதில் ரவிமோகன், எஸ்.ஜே .சூர்யா, அர்ஜூன் அசோகன் இணைந்து நடிக்கிறார்கள். ஷ்ரத்தா ஸ்ரீநாத், கவுரி பிரியா, மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் ஆகியோர் ஹீரோயின்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !