நாளை மறுநாள் 'டிசி' ரிலீஸ்: ஹீரோ, டைரக்டர் கப்சிப்
'மாநகரம், கைதி, மாஸ்டர், லியோ, விக்ரம், கூலி' போன்ற படங்களின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படம் 'டிசி'. இந்த படத்தை 'சாணிகாயிதம், ராக்கி, கேப்டன் மில்லர்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். நாளை மறுநாள், அதாவது ஆகஸ்ட் 7ம் தேதி படம் ரிலீஸ். வாமிகா கபி ஹீரோயினாக நடிக்கிறார். தேவதாஸ் என்ற கேரக்டரில் லோகேஷ், சந்திரா என்ற கேரக்டரில் வாமிகா வருகிறார்.
போலீசால் பாதிக்கப்பட்ட இளைஞனாக அவரும், துரோகத்தால் பாதிக்கப்பட்டவராக ஹீரோயினும் வருகிறார்கள். இவர்களின் பயணம், துரத்தல், பழிவாங்குதே கதையாம். தேவதாஸ், சந்திரா என்ற கேரக்டர்களின் முதல் ஆங்கில எழுத்தே இந்த பட தலைப்பு. படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒருநாளே இருக்கும் நிலையில் பிரஸ்மீட், பாடல் வெளியீட்டு விழா, விளம்பர நிகழ்ச்சிகள் எதுவும் ஏனோ நடக்கவில்லை. ஹீரோ பிஸி என கூறப்படுகிறது. லோகேஷ் கடைசியாக இயக்கிய 'கூலி' வெற்றி பெறவில்லை. 'கேப்டன் மில்லர்' விருது விஷயத்தால் அருண்மாதேஸ்வன் மீதும் நிறைய விமர்சனங்கள். அதனால், படத்தை வெற்றி பெற வைத்துவிட்டு பேசலாம் என இருவரும் வெயிட் பண்ணுகிறார்களாம். இரண்டு பேருமே வன்முறை, ரத்தம், சண்டைக்காட்சியில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். இவர்கள் இயக்கிய படம் எப்படி இருக்குமோ என பலருக்கும் கேள்வியும் எழுந்துள்ளது.