உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படித்த பள்ளிக்கு மூன்று மாடி கட்டடம் கட்டிக் கொடுத்த தனுஷ்

படித்த பள்ளிக்கு மூன்று மாடி கட்டடம் கட்டிக் கொடுத்த தனுஷ்

சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ளது தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி. இந்தப் பள்ளியில் தான் தனுஷ் பத்தாம் வகுப்பு வரை படித்தார். இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டடம் ஒன்றை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டடம் ஒன்றை நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். அதற்கு 'தனுஷ் பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தனுஷ், அவருடன் இணைந்து படித்த ஒளிப்பதிவாளர் குமரன் மற்றும் 1999 பேட்ச் மாணவர்கள், தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலகீதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தனது ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்து ஆசி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !