சூர்யா எல்லாருக்குமே பெரிய இன்ஸ்பிரேஷன்; மமிதா பைஜூ
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடித்த படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. ஆக.,14ல் ரிலீசாகிறது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, கோவை நடைபெற்றது. அப்போது மமிதா பைஜூ பேசியதாவது: கோயம்புத்தூர்ல உங்க எல்லாருடையும் இங்க இருக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்த எனர்ஜி உண்மையிலேயே அற்புதமாக இருக்கு. உங்கள எல்லாரையும் பார்ததது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
என்னோட இயக்குநர் வெங்கி சார்... என்னை இவ்வளவு அழகா வழிநடத்தியதற்கு ரொம்ப நன்றி சார். எனக்கு 'மேடி' கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. இந்த கதாபாத்திரத்திற்கு நான் நியாயம் செய்திருப்பேன் என்று நம்புகிறேன்.
உங்களோட படைப்புகளை நான் எப்பவுமே ரசிச்சிருக்கேன். நீங்க ரொம்ப 'கூல்' ஆன ஒரு இயக்குநர். உங்ககூட திரும்ப திரும்ப வேலை செய்ய விரும்புறேன்.
சூர்யா சார் கூட நடிக்க ஒரு தடவை வாய்ப்பு கைநழுவி போயிடுச்சு, ஆனா இந்த தடவை கடவுள் எனக்கு அதை கொடுத்துட்டாரு. உங்ககூட வேலை செய்தது ரொம்ப அற்புதம் சார். முதல்ல, உங்களைப் பார்த்து நான் நிறைய கவனிச்சிருக்கேன், நிறைய கத்துக்கிட்டேன். உங்களோட ஒழுக்கம், நீங்க ஒரு காட்சியை அணுகும் விதம், திரைக்குப் பின்னால நீங்க இருக்கும் விதம்... எல்லாமே ஒரு பெரிய முன்மாதிரி. நீங்க எங்க எல்லாருக்குமே ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்! இவ்வளவு உண்மையான, ஒரு சிறந்த சக நடிகரா இருந்ததற்கு ரொம்ப நன்றி சார்.
அப்புறம் ஜி.வி. பிரகாஷ் சார்... நாம மறுபடியும் இணைந்து பணியாற்றுறோம். நான் பண்ற மாதிரி நீங்களும் இந்த பாடல்களை ரொம்ப விரும்புவீங்கன்னு நம்புறேன். ஏன்னா, எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும்போது, ஒரு படத்துல முதல் சிங்கிள்ஸ் வரும்போது, அது என்னோட பாடலா இருக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல. அதனால் நான் ரொம்ப நன்றியோடும், பாக்கியசாலியாயும் உணர்றேன். ரொம்ப நன்றி ஜி.வி. சார்!
அப்புறம் சுனில் சார்... சுனில் சாரும் சூர்யா சாரும் செட்ல ரொம்ப ஜாலியா இருப்பாங்க. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷமா நண்பர்களா இருக்காங்க. அவங்களோட கெமிஸ்ட்ரி திரையிலும் திரைக்குப் பின்னாலும் ரொம்ப அற்புதமா இருக்கும்.
நாம இங்க ராதிகா மேமை ரொம்ப 'மிஸ்' பண்றோம். அவங்க ஒரு அன்பான மனிதர். செட்ல எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியா இருந்தாங்க.
ஆகஸ்ட் 14ம் தேதி நம்ம படம் ரிலீஸ் ஆகுது, எல்லாரும் பார்த்து ஆதரவு கொடுங்க! நான் இப்போ நிறைய பெண்களோட கனவை வாழ்ந்துட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்... சூர்யா சார்! 'கஜினி' படத்துல இருந்து! நான் உங்க ரசிகை. இவ்வாறு அவர் பேசினார்.