உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா விருப்பப்படி 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' கிளைமாக்ஸ்

சூர்யா விருப்பப்படி 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' கிளைமாக்ஸ்

தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதியன்று வெளியாக உள்ளது.

படத்திற்கான புரமோஷன் வேலைகளை படக்குழு ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார் படத்தின் இயக்குனர்.

“படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதிகப்படியாக திருத்தி எழுதப்பட்டது. நியாயப்படி கதை அமைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சிக்கும் ஒன்பது விதமாக எழுதி இருந்தேன். இப்படத்திற்காக மூன்று விதமான கிளைமாக்ஸ் காட்சிகளை எழுதி வைத்திருந்தேன். அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யும்படி சூர்யாவிடம் கேட்டேன்,” எனக் கூறியுள்ளார்.

சூர்யா தேர்வு செய்த கிளைமாக்ஸ் நியாயமானதா இல்லையா என்பது படம் வந்த பிறகு தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !