உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழம்பெரும் தெலுங்கு நடிகை பாவலா ஷியாமளா காலமானார்

பழம்பெரும் தெலுங்கு நடிகை பாவலா ஷியாமளா காலமானார்


தெலுங்கு சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குணசித்ர வேடங்களில் நடித்து வந்தவர் பாவலா ஷியாமளா. 1985ம் ஆண்டு வெளியான 'பாபாய் அப்பாய்' என்ற தெலுங்குத் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாகத் திரையுலகில் பயணித்து 250க்கும் மேற்பட்ட படங்களில் துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். புரி ஜெகன்னாத் இயக்கத்தில் வெளியான 'ஆந்த்ரவாலா' படத்தில் இவர் ஏற்ற 'பாவலா' என்ற கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், அதுவே இவரது பெயருடன் இணைந்து 'பாவலா ஷியாமளா' என்று அழைக்கப்பட்டார்.

கடந்த சில வருடங்களாகப் பட வாய்ப்புகள் இல்லாததால் வருமானமின்றி வறுமையில் தள்ளப்பட்டார். முதுமை மற்றும் உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வந்தார். தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் அவருக்கு உதவி வந்தனர். உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 75. அவருக்கு இறுதி சடங்கை தெலுங்கு நடிகர் சங்கம் நடத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !