உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜேசன் சஞ்சயின் ‛சிக்மா' செப்டம்பர் 18ல் ரிலீஸ்!

ஜேசன் சஞ்சயின் ‛சிக்மா' செப்டம்பர் 18ல் ரிலீஸ்!


தமிழக முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் படம் ‛சிக்மா'. சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள இப்படம் ஆக்சன் கதையில் உருவாகியுள்ளது. இந்த படம் ஜூலை 31ம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய்யின் கடைசி படமான ‛ஜனநாயகன்' ஜூலை 23ல் திரைக்கு வந்ததால் அப்படத்திற்கு வழிவிடும் வகையில் ‛சிக்மா' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சயின் சிக்மா படம் செப்டம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், தயாரிப்பாளர்கள் விரைவில் விளம்பரப் பணிகளைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிக்மா படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக பரியா அப்துல்லா கதாநாயகியாக நடித்துள்ளார். அவர்களுடன் சம்பத் ராஜ், ராஜு சுந்தரம், சிவ பண்டிட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !