உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 11 வருடங்களுக்கு பின் தாயான பத்மப்ரியா ; முதல் பிறந்தநாளில் குழந்தையை அறிமுகப்படுத்தினார்

11 வருடங்களுக்கு பின் தாயான பத்மப்ரியா ; முதல் பிறந்தநாளில் குழந்தையை அறிமுகப்படுத்தினார்


சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து', 'பொக்கிஷம்' மற்றும் 'மிருகம்' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை பத்மப்ரியா. கடந்த 2014ல் இவருக்கும் குஜராத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் ஷா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த 10 வருட காலத்தில் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த அவர் தற்போது தனது குழந்தைக்கு முதல் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள தகவலை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கூட தான் கர்ப்பமாக இருந்த தகவலையோ அல்லது தனக்குக் குழந்தை பிறந்த செய்தியையோ வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த பத்மப்ரியா, தற்போது தனக்குக் குழந்தை பிறந்து ஒரு வயதான விஷயத்தை வெளியில் தெரிவித்தாலும் கூட, அந்தக் குழந்தை ஆணா பெண்ணா என்பது குறித்த தகவலையும் வெளியிடவில்லை. தங்களுடைய கர்ப்பகாலப் புகைப்படங்களையும் குழந்தை பிறந்த தகவல்களையும் உடனுக்குடன் தெரிவிக்கும் நடிகைகள் மத்தியில் பத்மப்ரியா சற்றே வித்தியாசமானவர் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !