உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : சிவாஜியை தேடிச் சென்று சந்தித்த தலாய் லாமா

பிளாஷ்பேக் : சிவாஜியை தேடிச் சென்று சந்தித்த தலாய் லாமா

திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்திக்க வேண்டும் என்றால் யாராக இருந்தாலும் நீண்டநாள் காத்திருக்க வேண்டும். அல்லது அவர் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பார்க்கலாம் என்பதுதான் இன்றைய நிலை. ஆனால் அதே தலாய்லாமா, சிவாஜியை சந்திக்க விரும்பி படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சந்தித்த நிகழ்வு ஒன்று உண்டு.

1957ம் ஆண்டு தலாய்லாமா ஆன்மிக பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அவர் தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளுக்கு சென்று விட்டு கடைசியாக அப்போதைய முதல்வர் காமராஜரை சந்தித்து பேசினார். அப்போது அவர் 'நான் சிவாஜியை நேரில் பார்க்க வேண்டும் ஏற்பாடு செய்ய முடியுமா' என்று கேட்கிறார். அப்போது சிவாஜி 'உத்தம புத்திரன்' படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

உடனே காமராஜர் சிவாஜியை உடனே அழைத்து வரச் சொல்கிறார். அதற்கு தலாய்லாமா. 'அப்படி செய்யக்கூடாது. நான்தான் அவரை சென்று பார்க்க வேண்டும், அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்' என்றார். 'உத்தம புத்திரன்' படப்பிடிப்பு தளத்தில் சிவாஜியை சந்தித்து பேசினார் தலாய்லாமா. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு வெறும் செய்தியாகவே கடந்து சென்று விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !