உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் : விற்றுத் தீர்ந்த காலை 6 மணி காட்சி

ஜனநாயகன் : விற்றுத் தீர்ந்த காலை 6 மணி காட்சி

தலைப்பைப் பார்த்ததும் தமிழகத்தில் காலை 6 மணி சிறப்புக் காட்சியா என ஆச்சரியப்பட வேண்டும். இந்த 6 மணி காட்சி நடக்கப் போவது கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில்.

படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் பெங்களூருவில் காலை 6 மணி சிறப்புக் காட்சிக்கான முன்பதிவு ஆரம்பமாகிவிட்டது. சுமார் 27 தியேட்டர்களில் நடக்க உள்ள 6 மணி காட்சிக்கான முன்பதிவில் பெரும்பாலான தியேட்டர்களில் உடனடியாகவே முன்பதிவு நடந்து முடிந்துவிட்டது. ஒரு சில தியேட்டர்களில் மட்டும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன.

சில தியேட்டர்களில் ஒரு டிக்கெட்டின் கட்டணம் 1800 ரூபாய் வரை ஆன்லைன் இணையதளங்களிலேயே காட்டுகிறது. மற்ற தியேட்டர்களில் ரூ.1000, ரூ.800 என டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலை 6 மணி காட்சி இல்லாத காரணத்தால் பெங்களூரு சென்று படம் பார்ப்பவர்கள் அதிகமாகவே இருப்பார்கள். மேலும் சில ஊர்களிலும், தியேட்டர்களிலும் காலை 6 மணி காட்சிக்கான முன்பதிவு விரைவில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Tetra, New jersy
2026-07-17 18:26:33

முடிந்தது