உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாணுக்கு மும்பையில் அறுவை சிகிச்சை

பவன் கல்யாணுக்கு மும்பையில் அறுவை சிகிச்சை

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிார். சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு கடும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று ஓரிரு வாரங்கள் ஓய்வில் இருந்தார்.

இன்று அவருக்கு அவரது வலது தோளில் ஒரு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. சில வருடங்களாக தொடர்ச்சியான சுற்றுப்பயணம், தேர்தல் பிரச்சாரம், மக்கள் சேவை என சுற்றிக் கொண்டு இருந்தார். அதனால் அவரது இரண்டு தோள்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை ஒரு தோளில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சுமார் 3 மணிநேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மற்றொரு தோளிலும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்களாம். அதனால், பவன் கல்யாண் ஓரிரு மாதங்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது. சிகிச்சை முடிந்து வந்த பின்பு சில மாதங்கள் கழித்து அவரது அடுத்த படத்திலும் நடிக்கலாம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !