உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரத் நடிக்கும் 'மிஸ்டர் பாரத்': காமெடி கலந்த காதல் கதை

பாரத் நடிக்கும் 'மிஸ்டர் பாரத்': காமெடி கலந்த காதல் கதை


யுடியூப் பிரபலமான பாரத் நடிக்க, நிரஞ்ஜன் இயக்கும் படம் மிஸ்டர் பாரத். இந்த படத்துக்கும் ஏவிஎம் தயாரித்த 'மிஸ்டர் பாரத்'துக்கும் தொடர்பு இருக்கிறதா? அதன் ரீமேக்கா என இயக்குனரிடம் கேட்டால், ''அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை. தலைப்புக்கும், கதைக்கும் மட்டுமே தொடர்பு'' என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், ''ஒரு திரைப்படத்தின் முதல் அடையாளம் அதன் டைட்டில் தான். 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்திற்கு முதலில் 'மாஸ்டர் பீஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அதே தலைப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் இருந்ததால் மாற்று தலைப்பாக 'மிஸ்டர் பாரத்' தேர்வு செய்தனர். இந்த தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்தார். அந்த தலைப்பு படக்குழுவினருக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

இருப்பினும், ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படமான 'மிஸ்டர் பாரத்' என்ற தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதில் பொறுப்பும் இருந்தது. அதற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ என்.ஓ.சி. (தடையில்லா சான்று) பெற்ற பிறகு, படத்திற்கு 'மிஸ்டர் பாரத்' என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் ஆறு புதிய திறமையாளர்களை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறோம். பாரத் கதாநாயகனாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இயக்குநராக நிரஞ்ஜன், இசையமைப்பாளராக பிரணவ் முனிராஜ், கலை இயக்குநராக பாவ்னா கோவர்தன், படத்தொகுப்பாளராக திவாகர் டெனிஸ் ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.

'பிரின்ஸ்', 'லவ் டுடே' போன்ற படங்களில் கதாநாயகனின் நண்பராக பாரத் நடித்துள்ளார். ஒரு பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி செக் ஆபீசராக, அப்பாவி இளைஞனாக நடித்துள்ளார். ஒரு பெண் என்னை காதலிக்கிறாள் என்பதைக்கூட உணர முடியாத அளவுக்கு வெகுளித்தனமானவன். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன், தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். தாத்தா கதாபாத்திரத்தில் ஆர். சுந்தர்ராஜன் சார் நடித்துள்ளார். கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், பொம்மைகளை வடிவமைக்கும் டாய் டிசைனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்'', என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !