'தாய் கிழவி' இயக்குனருக்கு கார் பரிசு
ADDED : 5 hours ago
அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'தாய் கிழவி' படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அப்படத்தின் 100வது நாள் விழா கொண்டாட்டம் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில் இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு படத்தின் தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன், சுதன் சுந்தரம் ஆகியோர் கார் ஒன்றைப் பரிசாக அளித்தனர்.
நிகழ்ச்சியில் படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.
சிவகுமார் முருகேசன் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க 'சேயோன்' படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார்.