உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஏ' சான்றிதழை ஏற்றுக் கொள்ளுமா 'ஜனநாயகன்' குழு

'ஏ' சான்றிதழை ஏற்றுக் கொள்ளுமா 'ஜனநாயகன்' குழு

எச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்திற்கான சென்சார் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

13 வெட்டுக்களுடன் அப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் தர உள்ளதாக செய்திகள் வெளியாகின. இப்படம் விஜய்யின் கடைசி படம். விஜய்க்கு 18 வயதுக்குக் கீழான ரசிகர்கள் அதிகம். அவர்களால்தான் அவர் ஆட்சியைப் பிடித்தார் என்று கூட சொல்கிறார்கள்.

ஆனால், இப்போது 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டால் சிறுவர், சிறுமியர் யாரும் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது. குறைந்த பட்சம் 'யுஏ' சான்றிதழ் என்பதில் 13 + அல்லது 16 + என்று வாங்க வேண்டும். அப்போதுதான் அவர்களாவது பார்க்க முடியும்.

படத்திற்கான மேலும் வெட்டுக்களைக் கொடுங்கள். நாங்கள் 'யுஏ' கூட வாங்கிக் கொள்கிறோம் என படக்குழு கேட்டால் மட்டுமே அதற்கான சான்றிதழ் கிடைக்கும். என்ன மாதிரியான சான்றிதழை அவர்கள் வாங்கப் போகிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

'ஏ' சான்றிதழை ஏற்றுக் கொண்டால் அது படத்தின் வசூலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ரஜினிகாந்த் நடித்து வெளிந்த 'கூலி' படத்திற்கு அதனால்தான் வசூலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !