உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ரன், சண்டக்கோழி, வேட்டை' படங்கள் விஜய் பண்ண வேண்டியதா?

'ரன், சண்டக்கோழி, வேட்டை' படங்கள் விஜய் பண்ண வேண்டியதா?


லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீராஜாஸ்மின் நடித்த 'ரன்' படம் ஜூலை 10ல் ரீ ரிலீஸ் ஆகிறது. இது குறித்து இயக்குனர் லிங்குசாமி அளித்த பேட்டி:

'ஆனந்தம்' படத்துக்குபின் நான் இயக்கிய 2வது படம் 'ரன்'. 24 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி. அந்த காலகட்டத்தில் பல இயக்குனர்களின் முதல் படம் ஹிட்டானது. ஆனால், 2வது படம் ஓடவில்லை. அதனால், எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், மாதவனை நினைவில் வைத்து எழுதிய கதை ரன். அதுவரை சாக்லெட் பாய் ஆக நடித்த அவரை ரன் படத்தில் ஆக் ஷன் ஹீரோவாக்கினேன். இந்த தலைப்பை கொடுத்தது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

மீரா ஜாஸ்மின்

முதலில் வேறு ஒரு ஹீரோயின் சில நாட்கள் நடித்தார். அவர் நடிப்பு, சில விஷயங்கள் பிடிக்கவில்லை. அந்த சமயத்தில் ஷங்கரின் 'பாய்ஸ்' பட ஆடிஷனுக்கு வந்திருந்த மீரா ஜாஸ்மினை பார்த்து நடிக்க வைத்தோம். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது, என் இணை இயக்குனர் ஆங்கிலத்தில் அவருக்கு காட்சிகளை விவரிப்பார். நா.முத்துகுமார், யுகபாரதி, பா.விஜய் உள்ளிட்ட 5 பாடலாசிரியர்களை கொண்டு பாடல்களை உருவாக்கினோம். வித்யாசாகர் கொடுத்த அனைத்து ட்யூன்களும் ஹிட்.

மறைந்த ஜீவா ஒளிப்பதிவு செய்தார். அதில் பணியாற்றிய விவேக், ரகுவரன், நா.முத்துக்குமார் இன்று இல்லை. முதலில் படத்தை முடித்துவிட்டு நடிகர் விவேக்கை வைத்து காமெடி டிராக் தனியாக எடுத்து அதில் சேர்த்தோம். பிற்காலத்தில் அந்த பாணியை பலரும் கடைபிடித்தார்கள். ரகுவரன் - அனுஹாசன், பாசம் போர்ஷனும் பேசப்பட்டது. அந்த சப்வே சண்டைக்காட்சி பல படங்களில், வேறு வடிவில் வந்துகொண்டே இருந்தது.

விஜய்

முதலில் ரன் படத்தை விஜயை வைத்து எடுக்க நினைத்தேன். அவர் அப்போது 'தமிழன்' மாதிரி படங்கள் பண்ணிக்கொண்டு இருந்தார். ஒரு ஹீரோயின் பின்னால் சுற்றுகிற இந்த படம் வேண்டாம் என அவர் தந்தை சொல்லிவிட்டார். 'சண்டக்கோழி, வேட்டை' படங்களின் கதையையும் அவரிடம் சொன்னேன். அது நடக்கவில்லை. அவருடைய நட்பு தொடர்ந்தது. கீர்த்தி சுரேஷ் திருமணத்தின்போது கோவாவில் சில மணி நேரம் அவரிடம் மனம் விட்டு அரசியல் பேசினேன். நான் அவர் கட்சியில் இல்லை. ஆனாலும், அவர் ஆதரவாளன்தான்.

மணிரத்னம் உட்பட நாங்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குரூப், எங்கள் மீட்டிங் குறித்து விஜய் ஆர்வமாக விசாரித்தார். ரன் அடுத்த பாகம் எடுக்கிற ஐடியா இல்லை. சோஷியல் மீடியாவில் அதிகம், முதலில் பாதிக்கப்பட்டது நான்தான். அஞ்சான் படத்துக்கு அது நடந்தது. ஆனால், இப்போது அஞ்சான் மறுவெளியீட்டில் அந்த குறை போக்கப்பட்டு விட்டது. சில படங்கள் ரீ ரிலீசில் ஓடுகிறது. சில படங்கள் ஓடவில்லை. யாரை பற்றியும், எந்த விமர்சனம் பற்றியும் கவலைப்படாமல் உனக்கு பிடித்த படம் எடு என்று இயக்குனர் மணிரத்னம் சொல்லியிருக்கிறார். அதை நான் பாலோ பண்ணுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !