உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 300 ஆண்டு பழமையான வீட்டில் அரூபி

300 ஆண்டு பழமையான வீட்டில் அரூபி

இப்போது சின்ன பட்ஜெட்டில் உருவாகும் மலையாள படங்கள் கூட, தமிழில் டப்பாகி வருகிறது. அந்தவகையில் இந்த வாரம் வெளியாகும் படம் அரூபி. பிரதீப் ராஜ் தயாரிப்பில், அபிலாஷ் வாரியர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். விஷாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்ஷி படாலா, ஜாய் மேத்யூ, சிந்து வர்மா உட்பட பலர் நடித்துள்ளனர்.

படம் குறித்து விஷாக் ரவி பேசுகையில், ‛‛இந்த படம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. நானும் இயக்குநர் அபிலாஷ் வாரியரும் இணைந்து பல கதைகளை உருவாக்கினோம். எந்தக் கதையை முதலில் படமாக்குவது என்று நீண்ட நாட்கள் யோசித்தோம். இறுதியாக இந்தக் கதையை தேர்வு செய்தோம்.

'அரூபி' ஒரு ஹாரர் திரைப்படம். முதலில் இதை மலையாளத்தில் மட்டுமே எடுக்க திட்டமிட்டோம். ஆனால் கதையின் வலிமை மீது இருந்த நம்பிக்கையால், தமிழிலும் வெளியிட முடிவு செய்தோம். நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு எல்லா மொழிகளிலும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒரு ஹாரர் படத்தில் பின்னணி இசையும், ஒலித் தரமும் மிகவும் முக்கியமானவை. அதற்காக கோபி சுந்தர் பின்னணி இசையமைத்துள்ளார். 300 ஆண்டு பழமையான வீட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது''என்றார்.

பேய், திரில்லர் படங்களுக்கு டிஜிட்டல், டிவியில் நல்ல மவுசு இருப்பதால், இந்தவகை படங்களை பல மொழிகளில் தியேட்டரில் ரிலீஸ் செய்து பின்னர், அதை இதற்கு விற்பதும் அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !