பிளாஷ்பேக்: நடிகையான முதல் டப்பிங் கலைஞர்
சினிமாவில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பதுதான் இன்றைய நிலை. சண்டை கலைஞர்கள், புரொடக்ஷன் மானேஜர்களில் இருந்து ஆர்ட் டைரக்டர் வரை நடிகர் ஆகிறார்கள். ஆனால் முதன் முறையாக பிசியான டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்து நடிகை ஆனவர் டப்பிங் ஜானகி.
தெலுங்கு சினிமாவின் முன்னணி டப்பிங் கலைஞராக இருந்தவர் ஜானகி. தமிழ், மலையாளம், இந்தி, கன்னட மொழி படங்கள் தெலுங்கில் வெளியானால் அதில் நாயகிகளுக்கு குரல் கொடுப்பவர் இவர். பின்னர் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் கருப்பு ரோஜா, கோகுலம், ராஜாதி ராஜா, இது நம்ம ஆளு, மனைவி ஒரு மாணிக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தென்னிந்திய மொழிகளில் சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
சந்திரலேகா, செந்தூரப்பூவே, அத்திப்பூக்கள், ரோஜா, சொற்கம் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஜானகி சினிமாவில் அறிமுகமாகும்போது அதே பெயரில் பல நடிகைகள் இருந்ததால். இவர் டப்பிங் ஜானகி என்று அழைக்கப்பட்டார். அந்த பெயரே நிரந்தரமாகிவிட்டது.