பிளாஷ்பேக்: வெற்றி பெற முடியாத வாரிசு இயக்குனர்
பொதுவாக ஒரு நடிகரின் வாரிசுகள் நடிக்க வந்தால் அதில் ஒரு சிலர் நிலையத்து நின்று விடுவார்கள். சிவாஜி மகன் பிரபு, சிவகுமார் மகன் சூர்யா, கார்த்திக், விஜயகுமார் மகன் அருண்குமார் இப்படி ஒரு சில உதாரணங்களை சொல்லாம். ஆனால் ஒரு புகழ்பெற்ற இயக்குனரின் வாரிசுகள் அந்த இயக்குனர் அளவிற்கோ அல்லது அவர்களை தாண்டியோ வெற்றி பெற்றதில்லை.
கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், கே.பாக்யராஜ், மணிரத்னம் இப்படி நிறைய உதாரணங்களை சொல்லலாம். அவற்றில் ஒருவர் பழம்பெரும் இயக்குனர் கே.சங்கரின் மகன் கே.சிவபிரசாத். மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் நிறைய படங்களை இயக்கியவர் கே.சங்கர். பக்தி, புராண படங்கள் மூலம் புகழ்பெற்றவர். அவரது மகன் கே.சிவபிராத் அப்பாவிடம் உதவியாளராக இருந்து தொழில் கற்றவர். அவர் இயக்கிய படம் 'கல்யாணராசி'.
இந்த படத்தில் கார்த்திக், ரஞ்சனி, நம்பியார், மனோராமா, ஜெய் கணேஷ், ஜெய்சங்கர், ஆனந்தராஜா உள்ளிட்ட பலர் நடித்தனர். மனோஜ் கியான் இசை அமைத்தார். இந்த படம் தோல்வி அடைந்தது. சிவபிரசாத் இயக்கத்தில் 'வெயிலடிக்குது மழை பெய்யுது' என்ற படமும் தொடங்கப்பட்டது. ஆனால் அது வெளிவந்ததாக தகவல் இல்லை.