உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பில்டப் சீன்கள்: மகனை சமாதானப்படுத்திய அப்பா நடிகர்

பில்டப் சீன்கள்: மகனை சமாதானப்படுத்திய அப்பா நடிகர்


தன் முதல் இரண்டு படங்களும், 'அட்டர் பிளாப்'பான நிலையில், மூன்றாவதாக ஒரு, 'ஹிட்' படத்தை கொடுத்த, சீயான் நடிகரின் வாரிசு, தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆரம்பத்தில் இந்த படத்தின் கதையில் எந்த திருத்தமும் செய்யாதவர், படப்பிடிப்பு துவங்கும் நேரத்தில் பல காட்சிகளை மாற்றுமாறு இயக்குனருக்கு உத்தரவு போட்டு இருக்கிறார். குறிப்பாக, தன், 'ஹீரோயிசத்தை' பெரிய அளவில் வெளிப்படுத்தக்கூடிய, 'பில்டப்' காட்சிகள், 'ஓப்பனிங்'கில் இருந்து, 'எண்டு கார்டு' போடும் வரை படம் முழுக்க இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு இயக்குனர் மறுக்கவே நடிகருக்கும், அவருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனால், இந்த படத்திற்கு வேறு நடிகரை, 'புக்' பண்ணி விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார், இயக்குனர். இதை அறிந்த, சீயான் நடிகர் குறுக்கிட்டு, 'இன்னும் உனக்கென்று எந்த ரசிகர் வட்டமும் உருவாகவில்லை. அதனால், இப்போது உனக்கு, 'பில்டப் சீன்'கள் எதுவும் தேவையில்லை...' என்று மகனுக்கு புரியும் வகையில், 'அட்வைஸ்' கொடுத்து, மகனை சமாதானப்படுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !