உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பா, மகன் இடையே உள்ள பாசத்தை பேசும் படமாக 'வாரணாசி'

அப்பா, மகன் இடையே உள்ள பாசத்தை பேசும் படமாக 'வாரணாசி'


இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடிக்கும் மேல் என்கிறார்கள். சமீபத்தில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாரணாசி படத்தை குறித்து ராஜமவுலி கூறியதாவது, ''வாரணாசி திரைப்படம் பார்வையாளர்களை ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள், அண்டார்டிகாவின் பனிப்பரப்புகள், ராமாயணக் கடவுள்களின் உலகம், தேசிய பேரழிவுகள் மற்றும் பிரம்மாண்டமான பேண்டஸி அம்சங்கள் நிறைந்த ஒரு சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும்.''என கூறினார். மேலும், ''இத்தகைய பிரம்மாண்டமான காட்சிகளும் சாகசங்களும் இடம் பெற்றாலும், தந்தை மகன் உறவை குறித்து இப்படத்தில் உணர்வுப்பூர்வமாக பேசுகிறது.'' என ராஜமவுலி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !