பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்திய நயன்தாரா, த்ரிஷா
ADDED : 12 hours ago
தமிழ் சினிமா உலகில் யார் இறந்தாலும் ஒரு இரங்கல் பதிவு கூட போடாமல் இருக்கும் நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா. மூத்த தயாரிப்பாளர்கள், மூத்த இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் இறந்தால் கூட நேரில் சென்று அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல மாட்டார்கள்.
பாக்யராஜின் மனைவியும், முன்னாள் நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜுடன் நெருக்கமாகப் பழகுபவர்கள் நயன்தாரா, த்ரிஷா. அந்த நட்பில்தான் அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதாகச் சொல்கிறார்கள்.
பாக்யராஜால் நேரடியாகப் பயன் பெறாத மற்ற மொழி திரைக்கலைஞர்கள் கூட அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலிப் பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.