உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிறிய விஷயங்கள் : நடிகர் சங்க பிரச்சனை குறித்து மம்முட்டி கருத்து

சிறிய விஷயங்கள் : நடிகர் சங்க பிரச்சனை குறித்து மம்முட்டி கருத்து

மலையாளத் திரையுலகில் 'அம்மா' என்கிற பெயரில் நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் மோகன்லால் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நடிகை ஸ்வேதா மேனன் தலைமையில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு இடையே ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்துக்கொண்டு, காவல் நிலையம், நீதிமன்றம் வரை செல்லும் போக்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், முந்தைய நிர்வாகக் குழுவினர் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனைகளில் காணப்படும் குளறுபடிகள் மற்றும் தனக்கு எதிராகச் சதி நடந்ததாகவும் குற்றம் சாட்டி, ஸ்வேதா மேனன் தனது மொத்த நிர்வாகிகளுடனும் சேர்ந்து சமீபத்தில் ராஜினாமா செய்தார்..

டில்லியில் பத்மபூஷண் விருதைப் பெற்ற நடிகர் மம்முட்டி, செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், நடிகர் சங்கத்தில் நிலவும் தற்போதைய சர்ச்சைகள் எல்லாம் சிறிய விஷயங்கள் என்று குறிப்பிட்டார். மேலும், தற்போது நடப்பவை எல்லாம் நடக்கட்டும்; ஒரு தீர்வு நிச்சயமாகக் கிடைக்கும். அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை, அதனால் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்படும், அவை நிச்சயமாகச் சரியாகிவிடும். குழப்பங்கள் நீங்கி விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !