ஒன்றாக இணைந்து ரசிகர்களை சந்தித்த ரன்பீர் கபூர், யஷ்
பாலிவுட்டில் ரன்பீர் கபூர் மற்றும் 'கே.ஜி.எப்' புகழ் நடிகர் யஷ் நடிப்பில் அடுத்த பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி வருகிறது 'ராமாயணா' திரைப்படம். ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், யஷ் ராவணனாகவும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். நிதேஷ் திவாரி இந்த படத்தை இயக்கியுள்ளார். விரைவில் படம் வெளியாகும் விதமாக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்கள், யூடியூபர்கள் உள்ளிட்ட சிலருடன் இந்த படத்தின் சில காட்சிகளின் சிறப்புத் திரையிடல் நிகழ்வில் ரன்பீர் கபூர் மற்றும் யஷ் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டனர். காட்சிகளின் திரையிடல் முடிந்த பிறகு இவர்களுடன் சில நிமிடங்கள் அவர்களுடன் உரையாடவும் செய்தனர். இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.