இந்தியாவில் டாப் : 'துரந்தர்' மூலம் 320 கோடி வருமானம் பெற்ற ரன்வீர் சிங்
இந்தியத் திரையுலகத்தில் இதுவரையில் அதிக சம்பளம் பெற்று வந்த ரஜினிகாந்த், ஷாரூக்கான், பிரபாஸ், விஜய், அல்லு அர்ஜுன் ஆகியோரது சம்பளத்தை முந்தியுள்ளார் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்.
ஹிந்தித் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் என்று பேசுவதில்லை. படத்தின் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில்தான் அவர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். இதைத்தான் தெலுங்கு நடிகர்களும், தமிழ் நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என இங்குள்ள தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
'துரந்தர்' படத்தின் இரண்டு பாங்களில் நடிக்க ரன்வீர் சிங் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில்தான் ஒப்பந்தம் போட்டிருந்தாராம். முதல் பாகம் 1400 கோடியும், இரண்டாம் பாகம் 1800 கோடியும் என மொத்தம் 3200 கோடிக்கு மேல் வசூலித்தது.
அந்தப் படங்களின் மூலம் தன்னுடைய லாப பங்காக ரன்வீர் சிங்கிற்கு 320 கோடி கிடைத்துள்ளதாம். இப்படத்திற்காக அவர் சிறு அளவில் முதலீடு செய்ததாகவும் சொல்கிறார்கள். படத்தின் தியேட்டர் உரிமை, சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை, இசை உரிமை ஆகிய அனைத்தின் மூலமும் அவர் இநத் லாபப் பங்கைப் பெற்றுள்ளார்.