உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் ஆக்சிஜனே நீங்க தான் : சுவாசிகா கண்ணீர்விட்டது ஏன்?

என் ஆக்சிஜனே நீங்க தான் : சுவாசிகா கண்ணீர்விட்டது ஏன்?

சசி இயக்கத்தில் உருவான நுாறுசாமி படத்தில் கதைநாயகியாக நடித்து இருக்கிறார் சுவாசிகா, இந்த படத்துக்கும், சுவாசிகா கேரக்டர், நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் ரீதியாக பெரியளவில் சாதிக்காவிட்டாலும், விமர்சன ரீதியாக படம் பேசப்படுகிறது. பல தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களின் மனநிலையை பார்வையிட்டு இருக்கிறார் சுவாசிகா.

அங்கும் அவருக்கு ஏகப்பட்ட பாராட்ட கிடைக்க, ‛‛தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள அன்பை பார்க்கிறேன். இப்போதைக்கு எனக்கு நன்றி சொல்வதை தவிர வேறு எதுவும் இல்லை. நான் ஹீரோயினாக நடித்த ஒரு படம் இவ்வளவு தியேட்டரில் வரும். இப்படிப்பட்ட வரவேற்பை பெறும் என்று ஒரு நாளும் கற்பனை செய்தது இல்லை. இப்போது அது நடந்து இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவுக்கு கடமைப்பட்டுள்ளேன். இப்போது என் ஆக்சிஜனே தமிழ் ரசிகர்கள்தான். வருங்காலங்களில் இன்னும் பொறுப்புடன் செயல்பட்டு, கடினமாக உழைப்பேன்' என அழுதுகொண்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நல்ல இடத்துக்கு வர பல ஆண்டுகளாக அவர் போராடி வருகிறார். ஆனால், தோல்விகளும், ஏமாற்றங்களும் பரிசாக கிடைத்தன. லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகாவுக்கு அடுத்து சில படங்கள் கிடைத்தன. அதில் மாமன் படத்தில் மட்டுமே அக்காவாக நல்ல ரோல். கருப்பு, ரெட்ரோ படங்களில் அவருக்கு சீன்கள் இல்லை. அந்த வருத்தத்தில் இருந்தவருக்கு நுாறு சாமி பாராட்டு கண்ணீரை வரவழைத்துள்ளது. சுவாசிகாவுக்கு கோலிவுட்டில் இப்போது ஏகப்பட்ட ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகள் உருவாகிக் கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !