உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜாதிப்பெயர் வேணாம் : சனந்த் புதுமுடிவு

ஜாதிப்பெயர் வேணாம் : சனந்த் புதுமுடிவு

தமிழில் டிமாண்டி காலனி, பேட்ட, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனந்த். சமீபத்தில் நடித்த இலங்கை படமான நீளிராவும், அவர் கேரக்டரும் பேசப்பட்டது. முதன்முறையாக ஹார்ட்டின் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கிஷோர் இயக்க, மடோனா செபஸ்டியான் , இமயா ஹீரோயினாக நடிக்கிறார்கள். காதல் கதையாக இந்த படம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. ஜூன் 26ல் ரிலீஸ்.

சென்னையில் நடந்த இந்த பட விழாவில் இனி தன்னை யாரும் பழைய பெயரில் சனந்த் ரெட்டி என அழைக்க வேண்டாம். ஜாதிப்பெயர் வேணாம், சனந்த் மட்டும் போதும் என அறிவித்துள்ளார்.

தெலுங்கில், மற்ற சில மொழிகளில் ஹீரோக்கள், ஹீரோயின்கள் தங்கள் ஜாதிப்பெயரை போட்டுக்கொள்வது வழக்கம். தமிழகத்தில் அந்த நிலை கிடையாது, அது விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்பதால் இந்த முடிவை சனந்த் எடுத்துள்ளார். இந்த படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றுபவர் உத்ரா மேனன். இவர் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் சகோதரி. பிரேமம், நேரம் படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !