உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: இரும்புத்திரை: தொழிலாளி வைத்த டைட்டில்

பிளாஷ்பேக்: இரும்புத்திரை: தொழிலாளி வைத்த டைட்டில்


ஜெமினி ஸ்டுடியோஸின் உரிமையாளரான எஸ்.எஸ்.வாசன், முதலாளி மற்றும் தொழிலாளர் இடையிலான உறவை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இந்தியில் உருவாக்கினார். இது 'பைஹாம்' என்ற பெயரில் உருவானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதனை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார்.

தமிழ் படத்திற்கு என்ன டைட்டில் வைப்பது என்ற குழப்பம் இருந்தது. இதனால் அந்த இந்திப் படத்தை தனது தொழிலாளர்களுக்கு போட்டுக்காட்டி இதற்கு பொருத்தமான தமிழ் தலைப்பை எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தார். ஆயிரக்கணக்கில் டைட்டில்கள் வந்தது. ஒரே ஒரு தொழிலாளி மட்டும் 2500 தலைப்புகள் அனுப்பி இருந்தார்.

இதனால் உற்சாகமான வாசன் தொழிலாளர்களுக்கு ஒரு விருந்து வைத்தார். அந்த விருந்தில் 2500 தலைப்பு அனுப்பிய தொழிலாளரை அழைத்து 2500ல் இருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்து தருமாறு அவரை கேட்டார். அந்த தொழிலாளி தேர்வு செய்து கொடுத்த தலைப்புதான் 'இரும்புத்திரை'. தலைப்பு வாசனுக்கு பிடித்து விட அதையே படத்தின் தலைப்பாக்கி அதனை கொடுத்த தொழிலாளிக்கு கணிசமான பணத்தை பரிசாகவும் கொடுத்தார்.

'பைஹாம்' படத்தில் நடித்திருந்த வைஜெயந்தி மாலா, பி.சரோஜாதேவி மற்றும் பண்டரிபாய் ஆகிய பெண் நட்சத்திரங்கள் 'இரும்புத்திரை' படத்திலும் நடித்தனர். திலீப் குமார் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்தார். 'பைஹாம்' படத்தில் நடித்ததைப் போலவே, இப்படத்திலும் வைஜெயந்தி மாலாவின் தாயாரான வசுந்தரா தேவி, அவருக்கே தாயாகத் நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !