உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சின்ன சின்ன ஆசை' படத்தின் கதை என்ன

'சின்ன சின்ன ஆசை' படத்தின் கதை என்ன

சின்ன சின்ன ஆசை பாடல் மூலமாக, ரோஜா படத்தின் மூலமாக பிரபலமானவர் மதுபாலா. இப்போது மும்மையில் வசிக்கிறார். வர்ஷா வாசுதேவ் எழுத்து மற்றும் இயக்கத்தில் அவர் நடித்த 'சின்ன சின்ன ஆசை' திரையரங்குகளில் ஜூன் 19ம் தேதி வெளியாகிறது. இந்த இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழகம் எங்கும் வெளியிடுகிறது.

படம் குறித்து இயக்குனர் கூறுகையில் 'காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் 'சின்ன சின்ன ஆசை' படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ் முக்கியமான வேடத்தில வருகிறார். அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். '96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' யு சான்றிதழ் பெற்றுள்ளது.

மனிதர்களுக்குள் இருக்கும் சொல்லப்படாத சின்ன சின்ன ஆசைகள் ஏராளம். அந்த நுண்ணிய உணர்வுகளை அவற்றின் சாரம் மாறாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியே 'சின்ன சின்ன ஆசை''' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !