உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரிஷ்யம் 3 ஜூன் 18ல் ஓடிடியில் வெளியாகிறது!

திரிஷ்யம் 3 ஜூன் 18ல் ஓடிடியில் வெளியாகிறது!

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் 3 படம் கடந்த மே 21ல் திரைக்கு வந்தது. இப்படத்தில் அவருடன் மீனா, சித்திக், ஆஷா சரத், முரளி கோபி, அன்சிபா ஹாசன், எஸ்தர் அணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் 200 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. குறிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்திருந்தால் இப்படம் இன்னும் பல சாதனைகளை முறியடித்திருக்கும்.

திரிஷ்யம் 3 திரையரங்குகளில் ஏறக்குறைய ஓட்டத்தை முடித்துள்ள நிலையில், டிஜிட்டல் தளத்தில் வெளியாக தயாராகிவிட்டது. இந்நிலையில் இப்படம் ஜூன் 18ல் அமேசான் பிரைம் வீடியோவில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !