உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி பெயர், போட்டோ பயன்படுத்தக்கூடாது

ரஜினி பெயர், போட்டோ பயன்படுத்தக்கூடாது

சென்னை : ரஜினியின் பெயரை எந்த கட்சியும், அமைப்பும் பயன்படுத்தக்கூடாது என்று ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தக்கூடாது என ரஜினியின் உத்தரவுப்படி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக நிகழ்கால அரசியல் சூழல் பின்னணியில் ரஜினிகாந்த் பெயர் மற்றும் சில போட்டோக்கள் சில அமைப்புகளால் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன் பேரில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

M Ramachandran, Chennai
2026-06-13 20:11:33

இது ஒரு எலி புழுக்கை. இதையெவானும் பெயராய்ய்ய உபயோக படுத்த மாட்டான். சரியான தொடை நடுங்கி.எல்லாம் கெட்டப் தான். அடிமட்டத்தில் ஒண்ணுமில்லை. ஆட்டம் காணும். கொட கல்லு பிரதர்ஸ் இந்த ஆளை ஆடி அசையாமல் ஆணி அடித்து உட்கார வைத்திருக்கிறது. சாகும் வரைய அடிமை தளை.