வாசகர்கள் கருத்துகள் (1)
அர்ஜுன் சொன்னது கரெக்ட்.. அப்பட பாடல்கள் மற்றும் ARR இசை படத்தை தூக்கி நிறுத்தி இருக்கும்
சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் 'பிளாஸ்ட்'. ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கைன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் இன்று (மே 28) ரிலீசானது.
இப்படத்தின் புரமோஷனுக்காக நேர்காணலில் பங்கேற்ற நடிகர் அர்ஜூன் பேசுகையில், ''நான் நடித்த திரைப்படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் 'ரிதம்'. அப்படத்தை எப்போது டிவியில் போட்டாலும் அமர்ந்து பார்ப்பேன். நான் இயக்கிய படங்களைக்கூட அப்படி பார்த்தது கிடையாது. ரிதம் கதையில் இருந்த மென்மையே இதற்குக் காரணம். கார்த்திகேயனுக்கு (அர்ஜுன்) இன்னும் நல்லது நடத்திருக்கலாம் என்கிற கதாபாத்திரம், மீனா மற்றும் ஜோதிகாவின் எதார்த்தமான நடிப்பு, இயக்குனர் வசந்த்தின் பிரமாதமான இயக்கம் என எல்லா வகையிலும் நம் மனதைத் தொடும் நல்ல படம்'' என்றார்.
அர்ஜுன் சொன்னது கரெக்ட்.. அப்பட பாடல்கள் மற்றும் ARR இசை படத்தை தூக்கி நிறுத்தி இருக்கும்