உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்!

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்!


நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தோழியான பாடகி கெனிஷாவுடன் பல விழாக்களுக்கு வருகை தந்தார் ரவி மோகன். இதன் காரணமாக சோசியல் மீடியாவில் கெனிஷாவுக்கும், ஆர்த்திக்கு இடையிலான வார்த்தை மோதல் ஏற்பட தொடங்கியது. ஒரு கட்டத்தில் தன்னை பற்றி கெனிஷா அவதூறு பேசுவதாக நீதிமன்றத்தை நாடினார் ஆர்த்தி. அதன்பிறகு ஆர்த்தி குறித்து சோசியல் மீடியாவில் கருத்து வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு தடை போட்டது.

இப்படியான நிலையில் கடந்த 14ம் தேதி சென்னையில் இருந்து தான் வெளியேறப் போவதாக அறிவித்தார் பாடகி கெனிஷா. அதன் பிறகு மீடியாக்களை சந்தித்த நடிகர் ரவிமோகன், ஆர்த்தி உடனான தனது பிரிவுக்கு மூன்றெழுத்து இட்லி நடிகைதான் காரணம் என்று ஆவேசமாக கூறியவர், இனிமேல் என்னை சீண்டினால் சும்மா விட மாட்டேன். விவாகரத்து கிடைக்கும் வரை எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை. மன உளைச்சலில் இருப்பத்தால் என்னால் நடிக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது தீவிர ஆன்மீகத்தில் இறங்கி இருக்கிறார் ரவிமோகன். அதன் முதல்கட்டமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுள்ள அவர், அதற்கான விரதத்தை தொடங்கி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-05-20 22:18:55

இட்லியோ சாம்பார் ஓ உன் லைப் சட்னி ஆகாம பாத்துக்கோ .. நீ இவளவு ஸ்ட்ரெஸ் ஆக காரணமா இருந்த எல்லோரும் ஒர்த் தானா யோசி, உன்னோட health உனக்கு உன்னோட பாமில்லிக்கு நல்லது.. உன்னை தூண்டி விட்டு விளையாடி கிட்டு இருக்காங்க நீ ஒரு எமோஷனல் ஏகாம்பரம் னு தெரிஞ்சி