சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு?
'தனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை நடிக்கமாட்டேன். என்னால் இந்த சூழ்நிலையில் நடிக்க முடியவில்லை' என்று நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார். இந்த முடிவால் எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு என்று விசாரித்தால், சமீபகாலமாக அவர் படங்களில் நடிப்பை குறைத்துவிட்டார். கடைசியாக அவர் நடித்த பராசக்தி கூட பெரிய வெற்றி இல்லை. கடைசியாக அவர் நடித்ததில் 'சைரன், பிரதர், காதலிக்க நேரமில்லை, அகிலன், பூமி' படங்கள் ஓடவில்லை. 'பொன்னியின்செல்வன்' மட்டுமே ஹிட். இப்போது 'டாடா' கணேஷ் இயக்கத்தில் 'கராத்தே பாபு' படத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.
கார்த்திக் யோகி இயக்கும் 'ப்ரோகோடு' படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்த 'ஜீனி' படம் முடிந்துவிட்டாலும் பல மாதங்களாக அப்படியே நிற்கிறது. இது தவிர, யோகிபாபுவை வைத்து 'அன் ஆர்ட்டினரி மேன்' படத்தை இயக்கி வருகிறார். இந்த அறிவிப்பால் 'கராத்தேபாபு, ப்ரோகோடு' படங்களுக்கு பாதிப்பு வரும் என தெரிகிறது. யோகிபாபு படத்தை இயக்குவாரா எனத் தெரியவில்லை.
ப்ரோகோடு, யோகிபாபு நடிக்கும் படத்தை அவரின் ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்தை கவனித்து வந்த கெனிஷா சென்னையை விட்டு போய்விட்டார். இந்த படங்களின் கதியும் என்னவென தெரியவில்லை. குடும்ப பிரச்னையால் அவர் சினிமா வாழ்க்கை அதிகம் பாதிக்கிறது. மற்ற சினிமா பிரபலங்கள் டைவர்ஸ் செய்தனர். அவர்களின் தொழில் பாதிக்கப்படவில்லை. ஆனால், ரவிமோகன் நிலைமை வேறு. அவர் கடும் மன உளைச்சலில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர் அப்பா, அண்ணன், சகோதரி கை கொடுத்தால் அவர் மீள்வார் என அவருக்கு நெருக்கமான நண்பர்கள் நினைக்கிறார்கள்.