உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம்

விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம்


தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று', 'என் ஜி கே' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இயற்கை விரும்பியான இவர் அடிக்கடி வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றிப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். தற்போது இவர் ஹிந்தியில் நடித்துள்ள 'பதி பத்னி அவர் லோ 2' என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யும் விதமாகச் சமீபத்தில் குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் சுற்றுலா சென்றார் ரகுல் ப்ரீத் சிங். அப்போது கிர் தேசிய பூங்காவின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் காரில் இருந்து இறங்கிச் சாதாரணமாக அவர் நடந்து செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

வனப்பகுதிக்குள் வாகனத்தை விட்டு இறங்குவது சட்டப்படி குற்றம் என்பதால், பிரபலங்களுக்கு மட்டும் தனி விதிகளா என்று நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கிர் வனத்துறை அதிகாரிகள், ரகுல் ப்ரீத் சிங் நடப்பது போன்ற அந்த வீடியோ வனத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் எடுக்கப்படவில்லை என்றும், அவர் அந்த வளாகத்தின் நுழைவு வாயிலுக்கு வெளியேதான் நடந்து சென்றார் என்றும், அவர் எந்த வன விதிகளையும் மீறவில்லை என்றும் தெளிவுபடுத்தி இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !