உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து

திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து

நடிகர் சமுத்திரக்கனி இயக்கிய படங்கள், அவரின் மேடை பேச்சு, செயல்பாடுகளை பார்த்தவர்கள் அவரை நாத்திகர் என்றே சொல்வார்கள். அப்படிதான் அவரின் செயல்பாடுகள் அமைந்து இருந்தது. இந்நிலையில், இன்று அவர் திருப்பதி கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தவெக தலைவர் விஜயை வாழ்த்தி பேட்டி கொடுத்துள்ளார்.

சமுத்திரக்கனி கோயிலுக்கு போய் இருக்கிறார். அவர் செயல்பாட்டில் ஏதாவது மாற்றமா? தெலுங்கு படங்களில் அதிகம் நடிப்பதால் கொள்கை மாறிவிட்டாரா? என கேள்விகள் எழுகின்றன. ஆனால், அவருக்கு நெருக்கமானவர்களோ அவர் கொஞ்சம் பொதுவுடமை கருத்துகளை பேசுகிறவர். மற்றபடி, சமுத்திரக்கனி எப்போதும் கடவுளை கும்பிடுகிறவர், தெய்வபக்தி மிக்கவர். சில படங்களில் அப்படி நடித்து இருக்கிறார். இதற்குமுன்பு கூட சில புராண படங்களில் கூட நடித்து இருக்கிறார். இப்போது திருப்பதி சென்று இருக்கிறார்'' என்கிறார்கள்.

இதேபோல் வரிசையாக தோல்வி கொடுத்து வரும் நடிகர் சூர்யா, அடுத்த வாரம் வெளியாக உள்ள தனது கருப்பு படம் வெற்றி அடைய வேண்டி, கோவை லக்கேபாளையத்தில் அமைந்துள்ள தனது குல தெய்வமான மதுரகாளியம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !