சந்தானத்தின் ‛லவ் பைட்'
ADDED : 23 hours ago
காமெடி நடிகரில் இருந்து விலகி சந்தானம் தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் கடந்தாண்டு ‛டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் வெளியானது. ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இவரது அடுத்து படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இடையில் ரஜினி, சிம்பு படங்களில் காமெடி ரோலில் நடிப்பதாக தகவல் மட்டுமே வந்தது.
இந்நிலையில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு ‛லவ் பைட்' என பெயரிட்டுள்ளனர். சதீஷை வைத்து ‛கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தை தந்த செல்வின் ராஜ் சேவியர் இதை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் போஸ்டரை பார்க்கையில் இது காதல் உடன் கூடிய காமெடி கலந்த ஹாரர், திரில்லர் படமாக உருவாகும் என தெரிகிறது.