ஜோதிகா, சோனாக்ஷியின் சிஸ்டம் மே 22ல் ரிலீஸ்
ADDED : 22 hours ago
ஹிந்தியில் சைத்தான், ஸ்ரீகாந்த், டப்பா கார்டல் போன்ற படங்களில் நடித்துள்ள ஜோதிகா தற்போது சிஸ்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் மே 22ம் தேதி வெளியாகிறது. நீண்டகாலமாக புதைக்கப்பட்ட அநீதிகளை வெளியில் கொண்டு வரும் கதையில் உருவாகியுள்ள இந்த படம் அதிகாரத்திற்கும் நீதிக்கும் இடையிலான மோதல் பின்னணியில் உருவாகி இருக்கிறது. வருகிற மே 22 ஆம் தேதி பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.