உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே எனது மாதம்.... கூடவே ஹார்ட்டின் : திரிஷா பதிவு வைரல்

மே எனது மாதம்.... கூடவே ஹார்ட்டின் : திரிஷா பதிவு வைரல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. மே 4ம் தேதி அவருடைய பிறந்தநாள். 40 வயதைக் கடந்தாலும் இன்றும் கதாநாயகியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது அடுத்த படமாக மே 14ம் தேதி 'கருப்பு' படம் வெளியாக உள்ளது.

தன்னுடைய பிறந்தநாள் சில நாட்களில் வருவதை அடுத்து, மாதத்தின் முதல் நாளான நேற்று த்ரிஷா அவருடைய இன்ஸ்டா தளத்தில், 'மே (எனது) சீசன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிவிட்டது” என குறிப்பிட்டு ஹார்ட்டின் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இது ஆயிரம் அர்த்தத்தை சொல்வதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோரை இணைத்து கடந்த சில வாரங்களாகவே கிசுகிசுக்கள் பரவி வருகிறது. இருவரும் ஒரு திருமணத்திற்கு ஒன்றாக சென்ற பிறகு அது உறுதியானது. இருந்தாலும் இருவரும் தங்களது உறவு பற்றி இதுவரையில் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.

த்ரிஷாவின் பிறந்தநாளான மே 4ம் தேதியன்று தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !