லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் வெளியானது
ADDED : 6 hours ago
சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகமாகும் படம் லெனின் பாண்டியன். அவருக்கு ஜோடியாக ஸ்ரிதா ராவ் நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர் கங்கை அமரன் மற்றும் நடிகை ரோஜா ஆகிய இருவரும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதைக்களம் அவர்களைச் சுற்றித்தான் பின்னப்பட்டுள்ளது. டி.டி.பாலச்சந்திரன் என்பவர் இயக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது லெனின் பாண்டியன் படத்தில் இருந்து உன்னை நம்பி என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளார்கள்.