சினிமாவில் சாதிக்க வயது தடை இல்லை என்கிறார் ஸ்ரேயா
2003ல் ஜோதி கிருஷ்ணா இயக்கிய எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரேயா. அதன்பிறகு ரஜினியுடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல மெகா படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரவலாக நடித்து வரும் ஸ்ரேயா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், முன்பெல்லாம் திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான நடிகைகள் ஓரங்கட்டப்பட்டார்கள் அல்லது தங்களாகவே சினிமாவில் இருந்து ஒதுங்கினார். ஆனால் சமீப காலமாக திருமணத்திற்கு பிறகு பலரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்கள். எல்லா காலத்திலும் திறமையான நடிகைகளை ரசிப்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் தொடர்ந்து இயக்குனர்கள் என்னைப்போன்ற நடிகைகளை ஆதரிக்க வேண்டும். சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையாக இருக்க முடியாது. திறமை இருந்தால் எல்லா காலத்திலும் நடிகர்களை போன்று நடிகைகளாலும் சாதிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரேயா.