'அன்பே டயானா' படத்தில் ரோஜா வந்தது எப்படி? பாரி இளவழகன் தகவல்
'ஜமா' படத்தை இயக்கி, நடித்த பாரி இளவழகன் தற்போது 'அன்பே டயானா' என்கிற புதிய படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்த படத்தை 'டூரிஸ்ட் பேமிலி, குட் நைட்' போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார், மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் ரோஜா செல்வமணி, சேட்டன், பரிதாபங்கள் கோபி, செல் முருகன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
இப்போது பாரி இளவழகன் முதல்முறையாக 'அன்பே டயானா' படத்தை குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, அன்பே டயானா படத்தில் மிக வலிமையான ஒரு தெலுங்கு அம்மா கதாபாத்திரம் தான் மொத்தப் படத்தையும் தாங்கி நடக்கப்போகிறது என்பதை உணர்ந்ததும், நடிப்பில் தேர்ந்தவரான ரோஜா மேடம் தான் ஞாபகத்திற்கு வந்தார்கள். ஏனெனில், அவரும் தெலுங்கு மற்றும் ரொம்ப ஸ்டிராங்கான பெண். கடந்த பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்ததால் அவங்க கிட்ட கேட்கலாமா என்கிற தயக்கம் இருந்தது. ஆனாலும், சந்தித்து கதையை கூறினேன். 'என்னையே நான் பார்க்கற மாதிரி இருக்குது' என கூறி இந்த படத்திற்குள் வந்தாங்க. என தெரிவித்துள்ளார்.