உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி

மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி

கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன்பிறகு வெடி, வேட்டை என சில படங்களில் நடித்தார். பின்னர் மும்பையை சேர்ந்த அக்ஷய் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் கூட அவ்வப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார். குடும்ப புகைப்படங்களை, குறிப்பாக தனது மாமியாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அப்படி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் 70 வயதான தனது மாமியாருக்கு துணையாக ஒரு பாய் பிரண்ட் தேடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார் சமீரா. அதே வீடியோவில் அவரது மாமியார் இந்த 70 வயதில் எனக்கு எதற்கு திருமணம்? வருபவருக்கு சமைத்து போடவா என்று கேட்கிறார். அவருடன் இருக்கும் அவரது தோழிகள் இப்போது உன்னிடம் இருக்கும்போது அவர் ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று சமீரா ரெட்டியை புகழ்கிறார்கள். இப்படி ஜாலியான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் சமீரா ரெட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !