உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுந்தர்.சி மீது பணமோசடி புகார்

சுந்தர்.சி மீது பணமோசடி புகார்

இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி தற்போது விஷால் நடிக்கும் 'புருஷன்' படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் சட்டசபை தேர்தலில் புதிய நீதி கட்சியின் சார்பில் அதிமுக.,வின் இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது தீவிர பிரச்சாரத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் மீது பணமோசடி புகார் கூறப்பட்டுள்ளது. வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கிய கலகலப்பு ஒன்று மற்றும் இரண்டாம் பாகம் வெற்றி பெற்றது இதை தெடர்ந்து வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் கலகலப்பு 3 என்ற படத்தை தயாரிப்பதற்கு சுந்தர்.சிக்கு 1 கோடியே 81 லட்சத்து 15 ஆயிரம் கொடுத்துள்ளது.

அரண்மனை நான்காம் பாகம் வெற்றியடைந்ததையடுத்து தனது சம்பளத்தையும் படத்திற்கான பட்ஜெட்டையும் அதிகரித்ததால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சுந்தர் சிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கலகலப்பு மூன்றாம் பாகம் படத்திற்கு அதிக சம்பளம் மற்றும் படத்திற்கான பட்ஜெட்டை அதிகம் கேட்டதால் வி.ஆர்.டெல்லா தயாரிப்பு நிறுவனம் கலகலப்பு மூன்றாம் பாகத்தை தயாரிப்பதிலிருந்து பின்வாங்கியது.

இதுவரை இந்த படத்திற்காக சுந்தர் சிக்கு அளிக்கப்பட்ட ஒரு கோடியே 14 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணமும், நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் நடிகர் விமலுக்கு மொத்தமாக கொடுத்த ரூ.66 லட்சத்து 25 ஆயிரம் என ஒரு கோடியே 81 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் முன் பணத்தை தயாரிப்பு நிறுவனம் திருப்பி கேட்டுள்ளது. ஆனால் அதை தராமல் இயக்குனர் சுந்தர்.சி மிரட்டியதாவும், பண மோசடி செய்ததாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளர் மணிகண்ட ராமன் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !