உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் ‛கருப்பு', தெலுங்கில் ‛வீரபத்ரூடு' : ஏப்., 26ல் இசை வெளியீடு

தமிழில் ‛கருப்பு', தெலுங்கில் ‛வீரபத்ரூடு' : ஏப்., 26ல் இசை வெளியீடு

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். நாயகியாக திரிஷாவும், முக்கிய வேடங்களில் சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்து இருக்கிறார். கடந்தாண்டே படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி இப்படி என படம் தாமதமாகி ஒருவழியாக வருகிற மே 14ம் தேதியன்று திரைக்கு வர உள்ளது. பொதுவாக சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கிலும் வரவேற்பு இருக்கும். அந்தவகையில் கருப்பு படத்தை தெலுங்கில் 'வீரபத்ரூடு' என்ற பெயரில் அதேநாளில் வெளியிட உள்ளனர். இதை படக்குழுவும் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் 26ம் தேதியன்று பிரம்மாண்டமாக நடத்தி, அதனை மே 1ம் தேதியன்று ஜீ தமிழில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !