உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் நல்ல இடம் கிடைக்கும்: குஷி ரவி நம்பிக்கை

தமிழில் நல்ல இடம் கிடைக்கும்: குஷி ரவி நம்பிக்கை

டிரிப், தூக்குத்துரை படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மனிதன் தெய்வமாகலாம்'. விஒய்ஓஎம் என்டர்டெர்யின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் குஷி ரவி இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் செல்வராகவன் மனைவியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ஒய்ஜி மகேந்திரன், கவுசல்யா, கவுசி ரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார், ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வருகிற 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் நடிகை குஷி ரவி பேசுகையில், “மனிதன் தெய்வமாகலாம்' என் முதல் தமிழ் திரைப்படம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் விரும்பி பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படம். இந்த படத்திற்கு பிறகு தமிழில் எனக்கொரு நல்ல இடத்தை ரசிகர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்திற்காக உழைத்த ஒவ்வொரு கலைஞருக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !