உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஸ்லம்டாக்' படத்தில் இந்த விஷயத்திற்கு இடமில்லை ; விஜய்சேதுபதி

'ஸ்லம்டாக்' படத்தில் இந்த விஷயத்திற்கு இடமில்லை ; விஜய்சேதுபதி


விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராக இருக்கும் படங்களில் ஒன்று 'ஸ்லம்டாக் ; 33 டெம்பிள் ரோடு'. தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் இந்த படத்தை இயக்கி வருகிறார். படத்தில் கதாநாயகிகளாக தபு, சம்யுக்தா ஆகியோர் நடிக்க முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது.

அதே சமயம் சமீபத்தில் இந்த படம் குறித்து நடிகர் விஜய்சேதுபதி கூறும்போது, படத்தில் ரொமான்ஸ் காட்சி என்பதே இல்லை என்றும் கதாநாயகி தபுவும் தானும் பெரும்பாலும் உணர்வு ரீதியாக விலகியே இருப்போம் என்றும் கூறியுள்ளார். அந்த வகையில் படத்தில் கதைக்கும் ஆக்சனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

mindum vasantham, madurai
2026-03-28 10:20:16

ரொம்ப நாள் கழித்து ஒரு தமிழ் கதாநாயகன்