sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

சத்குருவின் ஆனந்த அலை

/

ஒரு மந்திரம் எப்படி மாற்றத்திற்கு வழிவகுக்கிறது?

/

ஒரு மந்திரம் எப்படி மாற்றத்திற்கு வழிவகுக்கிறது?

ஒரு மந்திரம் எப்படி மாற்றத்திற்கு வழிவகுக்கிறது?

ஒரு மந்திரம் எப்படி மாற்றத்திற்கு வழிவகுக்கிறது?


PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்திரங்களின் விஞ்ஞானம் குறித்தும், படைப்பின் ஆழமான பரிமாணங்களை எட்டுவதற்கு ஒரு மந்திரம் எப்படி திறவுகோலாக இருக்கமுடியும் என்பதையும் சத்குரு கூறுகிறார். மேலும், ஐந்து புனித உச்சாடனங்களை உள்ளடக்கிய “வைராக்யா” ஒலிப்பேழை பற்றியும், அவற்றிலிருந்து ஒருவர் எப்படி பலனடைய முடியும் என்றும் கூறுகிறார்.

சத்குரு:

மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான அதிர்வுகளாகக் காண்கிறது. எங்கே ஒரு அதிர்வு இருக்கிறதோ, அங்கே கட்டாயமாக ஒரு ஒலி இருக்கிறது. அதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு படைப்பும் ஒருவிதமான ஒலியாக அல்லது படைப்பு என்பது ஒலிகளின் கூட்டுக் கலவையாக இருக்கிறது - அதாவது படைப்பு எண்ணற்ற மந்திரங்களின் கலவையாக இருக்கிறது. இவற்றுள், ஒரு சில மந்திரங்கள் அல்லது ஒரு சில ஒலிகள், சாவிகள் போல் செயல்படக்கூடியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட விதமாக நீங்கள் அவற்றைப் பயன்படுத்தினால், வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைத் திறப்பதற்கும் உங்களுக்குள் உணர்வதற்கும் அவை ஒரு திறவுகோலாகின்றன.

மந்திரம் - படைப்புக்கு ஒரு திறவுகோலாக மாறுவது

மந்திரம் என்பது நீங்கள் உச்சரிக்கும் விஷயமல்ல. நீங்கள் அதுவாகவே மாறுவதற்கு முயற்சிக்கும் ஒன்று! ஏனென்றால், நீங்கள் திறவுகோலாக மாறினாலே தவிர, படைப்பு உங்களுக்காகத் திறக்காது. மந்திரமாக மாறுவது என்றால் நீங்கள் திறவுகோலாக மாறுவது. நீங்கள் திறவுகோலாக இருந்தால் மட்டுமே, உங்களால் பூட்டைத் திறக்க முடியும். இல்லையென்றால் வேறொருவர் உங்களுக்காகத் திறக்கவேண்டும். அவரின் வழிகாட்டுதலை நீங்கள் பின்தொடர வேண்டும்.

மந்திரங்கள், அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான மிகச்சிறந்த படிநிலையாக இருக்கமுடியும். ஒற்றை மந்திரமே மக்களிடம் அந்த அளவுக்குப் பிரம்மாண்டமான விஷயங்களை செய்துவிட முடியும். ஏதோ ஒன்றை உருவாக்குவதில் மந்திரங்கள் ஆற்றல் வாய்ந்த சக்தியாக இருக்கமுடியும். ஆனால் அத்தகைய மந்திரங்கள், ஒலியாக இருக்கின்ற அத்தனை குறித்தும் முற்றிலுமான புரிதல் கொண்ட ஒரு மூலகர்த்தாவிடமிருந்து எழுந்தால் மட்டும்தான், இது நிகழும். “ஒலியாகிய அனைத்தும்” என்று நாம் கூறும்போது, நாம் ஒட்டுமொத்த படைப்பைப் பற்றி பேசுகிறோம். ஒரு மந்திரம் அந்த விதமான மூலத்திலிருந்து எழுந்து, ஆழ்ந்த புரிதலுடன் தூய்மையாக பரிமாறப்படும்போது, மந்திரங்கள் ஆற்றல்வாய்ந்த சக்தியாக இருக்கமுடியும்.

விழிப்புணர்வுடன் மந்திரங்களை அணுகுதல்

மந்திரங்களில் பல விதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரமும், உடலின் வெவ்வேறு பகுதியில், குறிப்பிட்ட விதமான ஒரு சக்தியைச் செயல்படுத்துகிறது. அதற்குத் தேவையான விழிப்புணர்வு இல்லாமல், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஒலியை எழுப்புவது மனதிற்கு மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது. திரும்பத் திரும்ப எழுப்பப்படும் எந்த ஒலியும் உங்கள் மனதை எப்போதும் மந்தமடையச் செய்கிறது. ஆனால் முறையான விழிப்புணர்வோடும், அதன் தன்மை என்ன என்கிற துல்லியமான புரிதலோடும் உச்சரிக்கப்பட்டால், ஒரு மந்திரம் மிகவும் சக்திவாய்ந்த கருவியாக இருக்கமுடியும். ஒரு விஞ்ஞானம் என்ற வகையில் அது மிகவும் சக்திவாய்ந்த ஒரு பரிமாணம். ஆனால் அதற்குத் தேவையான அடிப்படை இல்லாமலும், தேவைப்படும் சூழலை உருவாக்காமலும் அது வழங்கப்பட்டால், பெரும் பாதிப்புகளை அது உண்டாக்க முடியும், ஏனெனில் அது தற்சார்புடைய விஞ்ஞானம். பொதுவாக வழக்கத்தில் இருக்கின்ற காயத்ரி மந்திரத்தை முறைப்படி உச்சரிக்காத ஒரே காரணத்தினால் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திக்கொண்ட மக்களை நாம் அறிந்திருக்கிறோம்.

மந்திரமும் சமஸ்கிருதமும் - என்ன தொடர்பு?

மந்திரங்கள் எப்போதும் சமஸ்கிருதத்தின் அடிப்படையிலிருந்து வருகின்றன என்பதுடன், சமஸ்கிருத மொழியின் அடிப்படையான அம்சங்கள், ஒலியை அதிகம் பிரதிபலிப்பதாக உள்ளன. ஆனால் அதைப் பலதரப்பட்ட மனிதர்கள் பேசும்போது, ஒவ்வொருவரும் அவரவருக்கே உரிய விதத்தில் கூறுகின்றனர். ஒரு மந்திரத்தை பெங்கால் இனத்தவர் கூறினால், அவர்கள் அதனை அவர்களுக்கே உரிய முறையில் கூறுவார்கள். அதே மந்திரத்தை தமிழ் மக்கள் கூறினால், அவர்கள் அதை வேறொரு விதத்தில் கூறுகிறார்கள். அதையே அமெரிக்கர்கள் கூறினால், முற்றிலும் வித்தியாசமான விதத்தில் அவர்கள் கூறுவார்கள். இதேபோல், வெவ்வேறு மொழி பேசும் வெவ்வேறு மக்களும், அவர்களுக்குப் பழக்கமான மொழிக்கு ஏற்றபடி கூறுவார்கள். முறைப்படியான பயிற்சி வழங்கப்பட்டாலொழிய, பல்வேறு மந்திரங்களை அவர்கள் சிதைத்துவிடக்கூடும். அப்படிப்பட்ட பயிற்சி பூரணத்துவம் மிக்கதாக இருக்கவேண்டியிருப்பதுடன், இப்போதெல்லாம் மக்களிடம் அந்த அளவுக்கான பொறுமையோ அல்லது அர்ப்பணிப்போ இருப்பதில்லை. ஏனென்றால், அதற்கு அளவற்ற கால அவகாசமும், ஈடுபாடும் தேவைப்படுகிறது.

நாத யோகம் - ஒலி மற்றும் வடிவத்திற்கு இடையிலான இணைப்பு

சமஸ்கிருத மொழியானது ஒரு சாதனமாக இருக்கிறது. அது தொடர்பு கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. மற்ற பெரும்பாலான மொழிகளும், நாம் ஏதோ ஒன்றைக் குறிக்கவேண்டியிருந்த காரணத்திற்காக உருவாக்கப்பட்டன. ஆரம்பகட்டத்தில் சொற்ப எண்ணிக்கையிலான வார்த்தைகளோடு மட்டும் மொழிகள் தொடங்கினாலும், பிறகு பல்வேறு வடிவங்களாக அவை பெருகிவிட்டன. ஆனால் சமஸ்கிருதம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மொழி ஏனெனில், எந்த ஒரு ஒலியையும் நீங்கள் ஒலி அலைமானி (ஆஸிலாஸ்கோப்) கருவியினுள் செலுத்தினால், ஒவ்வொரு ஒலியுடனும் இணைந்துள்ள அந்தக் குறிப்பிட்ட வடிவத்தை, கருவியானது வெளிப்படுத்துகிறது. அதே விதமாக, ஒவ்வொரு வடிவத்துக்கும் அதனுடன் தொடர்புடைய ஒலி ஒன்று இருக்கிறது. படைப்பிலுள்ள ஒவ்வொரு வடிவமும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் எதிரொலித்துக் கொண்டிருப்பதுடன், ஒரு குறிப்பிட்ட ஒலியையும் உருவாக்குகிறது.

நீங்கள் ஒரு ஒலியை உச்சரிக்கும்போது, ஒரு வடிவம் உருவாக்கப்படுகிறது. மிகச் சரியானதொரு வடிவத்தை உருவாக்குவதற்காக, ஒரு குறிப்பிட்ட முறையில் ஒலிகளை உபயோகப்படுத்துவதற்கென்றே ஒரு முழுமையான விஞ்ஞானம் உள்ளது. அதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சூழலில் ஒலிகளை உச்சரிப்பதனால், சக்திவாய்ந்த வடிவங்களை நாம் உருவாக்க முடியும். இதுவே நாதயோகம், அதாவது ஒலியின் யோகம் என்று அறியப்படுகிறது. ஒலியின் மீது உங்களுக்கு ஆளுமை இருந்தால், அதனோடு இணைந்துள்ள வடிவத்துடனும் உங்களுக்கு ஆளுமை உள்ளது.

இது எனது குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது: நான் யார் பேசுவதையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பேன். ஆரம்பத்தில், அவர்களது வார்த்தைகளை நான் கேட்டேன். பிறகு ஒலிகளை மட்டும் கேட்டேன். சிறிது காலம் கழித்து, அவர்களைச் சுற்றிலும் வினோதமான வடிவங்கள் மட்டும் நிகழ்வதை நான் கண்டேன். அது என் கவனத்தை ஈர்ப்பதாகவும், வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்ததால், வார்த்தைகளுக்கு கவனமே கொடுக்காமல் ஒற்றை வார்த்தையைக்கூட புரிந்துகொள்ளாத போதும், என்னால் அவர்களை வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்க முடிந்தது.

வடிவமும், ஒலியும் தொடர்பு கொண்டுள்ள ஒரே மொழியாக சமஸ்கிருதம் இருக்கிறது. உதாரணமாக, தமிழில் “கருத்து” என்ற வார்த்தையில், “கருத்து” அல்லது “கறுத்து” என்ற இரண்டு பொருளில் குறிக்கப்பட்டாலும், ஒரே உச்சரிப்பை உடையது, எழுத்துக்கள் மட்டும் வெவ்வேறானவை. நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பது அளவை அல்ல. இங்கே ஒலி என்பது அளவையாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குத் தொடர்புடைய ஒலியை நீங்கள் உணர்ந்தறியும்போது, அந்த வடிவத்திற்கு இந்த ஒலியை நீங்கள் பெயராகத் தருகிறீர்கள். இப்பொழுது ஒலியும், வடிவமும் இணைக்கப்படுகின்றது. நீங்கள் ஒலியை உச்சரித்தால், வடிவத்துடன் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள் - மனதளவில் மட்டுமல்ல, படைப்பின் நிலையிலும், நீங்கள் அதற்குரிய வடிவத்துடன் தொடர்புகொள்கிறீர்கள். சமஸ்கிருதம், படைப்பின் அச்சுப் பிரதியைப் போன்றது. வடிவத்தில் என்ன இருக்கிறதோ, அதை நாம் ஒலியாக உருமாற்றினோம். காலப்போக்கில், பல மாறுபாடுகள் நிகழ்ந்துள்ளன. இன்றைக்கும் கூட அதற்குரிய சரியான வடிவத்தில் அதனை எப்படிப் பாதுகாப்பது என்பது ஒரு சவாலாகவே இருக்கிறது. ஏனென்றால் அதற்குத் தேவையான அறிவும் புரிதலும் விழிப்புணர்வும் பெருமளவு தொலைந்துவிட்டது.

அர்த்தத்தைக் காட்டிலும் ஒலி மிக முக்கியமானது

சமஸ்கிருதம் கற்றுத்தரப்படும்போது, அதை ஏன் நெட்டுரு மனப்பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணம் அதுதான். அவர்கள் முடிவில்லாமல் மொழியை உச்சாடனம் செய்துகொண்டே இருக்கின்றனர். நீங்கள் அறிந்திருக்கிறீர்களா, இல்லையா என்பது ஒரு பொருட்டில்லை. ஒலிதான் முக்கியமே தவிர அர்த்தம் இல்லை. அர்த்தங்கள் உங்கள் மனதில் உருவாகின்றன. தொடர்பு கொள்வது ஒலி மற்றும் வடிவம்தான். நீங்கள் தொடர்பு கொள்கிறீர்களா இல்லையா? - அதுதான் கேள்வி. அதனால்தான் அது தமிழைத் தவிர, ஏறக்குறைய எல்லா இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளின் தாயாக உருவாகியுள்ளது. தமிழானது சமஸ்கிருதத்திலிருந்து பிறக்கவில்லை. அது தன்னிச்சையாக உருவாகியது. மற்ற எல்லா இந்திய மொழிகளும், பெரும்பாலும் எல்லா ஐரோப்பிய மொழிகளும் சமஸ்கிருதத்தை மூலமாகக்கொண்டுள்ளன.






      Dinamalar
      Follow us